1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : புதன், 25 மே 2022 (23:03 IST)

கரூரில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி....காங்கிரஸ் பெண் எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு

kambam thuruviza
கரூர் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி – காங்கிரஸ் பெண் எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு | கம்பி வேலியினை ஏறிகுதித்த பெண் காங்கிரஸ் எம்.பி | செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு.
 
தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் கம்பம் ஆற்றுக்கு விடும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது – திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதி – செய்தியாளர்களுக்கு அனுமதி பாஸ் கொடுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காததால் வாக்குவாதம் செய்தியாளர்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு பரபரப்பு
 
தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் விமர்சையான ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

மேலும், கரூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கச்சேரி பிள்ளையார் ஆலயத்தின் வழியாக கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்நிலையில்,. ஏற்கனவே இந்த திருவிழாவிற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர். கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறினால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் என்று பசுபதிபாளையம் ஆய்வாளர் செந்தில்குமார் கூறிய நிலையில்,. காத்திருந்த பத்திரிக்கையாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி அட்டையுடன் காத்திருந்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுமட்டுமில்லாமல், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொருமைக்கொரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில்  கம்பிவேலிகளை தாண்டி குதித்தார். ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியில் முழுக்க, முழுக்க திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டனர்.

செய்தி சேகரிப்பதற்காக பாஸ் வழங்கப்பட்ட செய்தியாளர்கள் யாரையும் இந்நிகழ்ச்சியில் அனுமதி அளிக்கபடவில்லை, பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களை திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே புதுமையான ஒரு சம்பவமாக இருந்துள்ளது. ஏராளாமான நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர உள்ள திராவிட மாடல் ஆட்சியில், எண்ணங்களை பிரதிபலிக்கும் செய்தியாளர்களுக்கும், கூட்டணி கட்சியினை சார்ந்த ஒரு பெண் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் அனுமதி மறுத்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.