புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூலை 2021 (08:44 IST)

ஓபிஎஸ் அவசரமாக டெல்லி பயணம்: என்ன காரணம்?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை பத்து முப்பது மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் கிளம்புகிறார் என்றும் டெல்லியில் அவர் இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீரென டெல்லி செல்வது அதிமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த வித முன் திட்டமும் இல்லாமல் திடீரென ஓபிஎஸ் டெல்லி செல்வது ஏன் என்ற கேள்வியும் அதிமுகவினர்களை மட்டும் என்று ஆளும் தரப்பினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருடனும் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ய உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அவர்கள் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்த விளக்கத்தை அதிமுக இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது