புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (13:33 IST)

விடியல் தர போவதாக வஞ்சிக்கும் திமுக! – போராட்டம் அறிவித்த அதிமுக!

விடியல் தர போவதாக தமிழகத்தில் ஆட்சியமைத்த திமுக மக்களை வஞ்சிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக மாநில அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சியமைத்த நிலையில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் ”திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விலைவாசி, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விடுகிறது. அதுபோல நீட் தேர்வு, காவிரி அணை விவகாரம் உள்ளிட்டவற்றிலும் திமுக செயல்பாடு அலட்சியமாக உள்ளது. "விடியல்" தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே ! வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை வஞ்சிக்காதே” என கூறப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் தேவைகளையும், தமிழகத்தின் தேவைகளையும், மேற்சொன்ன கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி 28.07.2021 புதன்கிழமை அன்று அன்று அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் தங்களது வீடுகள் முன்னே பதாதைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தமிழக மக்களின் உரிமைக்குரலாய் ஒலிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.