1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (07:17 IST)

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போட்டியா? எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்? அவரே அளித்த பேட்டி..!

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட போவதாகவும் அவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பதை நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தற்போது அதிமுக மீட்பு குழு என்ற அமைப்பை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவுடன் அவர் கூட்டணி வைப்பார் அல்லது பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருமே போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் பாஜகவில் இணைந்தால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் நேற்று அளித்த பேட்டியில் இனிவரும் தேர்தலில் தான் இறைவன் கொடுக்கும் சின்னத்தில் போட்டு விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

எனவே அவர் பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவாரா? அல்லது பாஜக சின்னத்தில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva