1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:36 IST)

வங்கதேசத்தில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை: அமெரிக்கா குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் நியாயமாகவோ சுதந்திரமாகவோ தேர்தல் நடைபெறவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. 
 
சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நாட்டு பிரதமர் ஷேக் லீக் 222 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா  5-வது முறையாக வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்க உள்ளார். 
 
இந்த நிலையில்  அமெரிக்க வெளியுறவு செய்து தொடர்பான தனது சமூக வலைதள பக்கத்தில் வங்கதேச தேர்தல் குறித்து கூறியிருப்பதாவது:
 
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் வங்கதேச மக்களுக்கும், அவர்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.  ஆனால், இந்தத் தேர்தல் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் நடைபெற்ற தேர்தல் அல்ல என்பதை மற்ற பார்வையாளர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.  
 
மேலும், தேர்தல்களின் போதும், அதற்கு முந்தைய மாதங்களில் நடைபெற்ற வன்முறைகளையும்  நாங்கள் கண்டிக்கிறோம்.  மேலும் தேர்தலில் மற்ற கட்சிகள் பங்கேற்காததற்கும் நாங்கள் வருந்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran