ஓபிஎஸ் அணிக்கு 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு: கசிந்த பரபரப்பு தகவல்!
ஓபிஎஸ் அணிக்கு 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு: கசிந்த பரபரப்பு தகவல்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க இருக்கிறார். ஆனால் சட்டசபை கடும் அமளி காரணமாக மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு தற்போது எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 11 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மையை விட 6 எம்எல்ஏக்கள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வந்தன. 116 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தாலே போதும் என்ற நிலையில் எடப்பாடி வசம் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறினார்கள்.
ஆனால் தற்போது கடும் அமளி நிலவி வருகிறது. இதனிடையே ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 16-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என கூறப்படுகிறது.