புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (17:45 IST)

'' ஆபரேசன் கஞ்சா 2.0 ..''..டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 ஏப்ரல் 27 ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடத்தை போலீஸார் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளதாவது:

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் தொடச்ச்சியாக ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்பா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளான மாணவர்களைக் கண்டறிந்து மன நல ஆலோசகரிடம் அனுப்பி கவுன்சிலிங்க் வழங்க வேண்டும்.

அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கஞ்சா செடி ஒழிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் கஞ்ச்சா குட்கா குற்றவாளிகளைக் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.