திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (17:09 IST)

நான் முதல்வராக இங்கு இல்லை, முதல்வரை உருவாக்க... அண்ணாமலை பஞ்ச்!

முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

 
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தன் மீது 100  கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தான் கூறிய குற்றச்சாட்டு பொய் என்றால் தன்னை கைது செய்யவும் என்றும் இன்று மாலை 6 மணி வரை இங்கேதான் இருப்பேன் என்றும் முடிந்தால் தொட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதோடு முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை, மாறாக முதலமைச்சரை உருவாக்கவே விவசாயியான நான் தொட்டாம்பட்டியில் இருந்து சென்னை வந்துள்ளேன் எனவும் கூறினார்.