வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (12:53 IST)

தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை ஒன்றிய அரசின் நினைவுக்கு வருகிறது- சு.வெங்கடேசன் எம்.பி.,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை ஒன்றிய அரசின் நினைவுக்கு வருகிறது என்று மத்திய அரசை சு.வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இதற்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், மா நில கட்சிகளான அதிமுக, திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
பாஜக, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தலில் முக்கிய அம்சமான தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஒவ்வொரு கட்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
 
தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடிவோவை ஒளிபரப்பும்  பிரசார வேன்களை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா  நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் தொடங்கி வைத்தார். இதேபோல் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள், கடந்த கோவிட் காலத்தின் போது மத்திய அரசு ரயில்வேயில்  உயர்த்திய கட்டண உயர்வை  குறைக்க வேண்டும் என  கோரிக்கைகாள் வைத்து பல கட்டமாக வலியுறுத்தி வந்த நிலையில், இரயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை மத்திய அரசு, சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
இது தேர்தல்   நேரத்தில் மக்களிடம் ஓட்டுகள் பெறுவதற்கான யுத்தி என  எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
 
இதுகுறித்து திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி., வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது:

இரயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி. வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை. தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை ஒன்றிய அரசின் நினைவுக்கு வருகிறது