பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி.,
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி.,கீதா கோடா பாஜகவில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கட்சி தாவல் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில்,ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பூம்( எஸ்.டி) தொகுதியின் காங்கிரஸ் எம்பி., கீதா கோடா இன்று காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
அம்மாநில பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் கீதா கோடா பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு நாட்டை சிக்கீல் சிக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என்று விமர்சித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜார்கண்டில் பாஜக - ஏ.ஜே.எஸ்.யு கூட்டணி மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.