1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (07:06 IST)

இன்றுடன் முடிகிறது ஒரு வருடம்! எப்போது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், ஆன்மீக அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியாகி இன்றுடன் சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட போதிலும் இன்னும் அவர் அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை

ரஜினிக்கு பின் அரசியலுக்கு வருவதாக அறிவித்த கமல்ஹாசன், கட்சி தொடங்கி களப்பணிகளில் இறங்கிவிட்டார். ஆனால் கட்சி பணிகள் 90% முடிந்துவிட்டதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே ரஜினி பேட்டி ஒன்றில் கூறியபோதும் இன்னும் அவர் கட்சி ஆரம்பிக்காதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்றும், சட்டமன்ற தேர்தலே அவரது நோக்கம் என்பதால் கட்சி ஆரம்பிக்க இன்னும் ஒருசில மாதங்கள் ஆகலாம் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் , தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்குமுன் அவர் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்