'பேட்ட' டிரைலர் ரிலீஸ் நேரம் திடீர் மாற்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தில் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டிரைலர் வெளியாக இன்னும் சுமார் அரை மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் தற்போது இந்த டிரைலர் இன்று காலை 10.25 மணிக்கே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தாலும் இந்த டிரைலரின் ஒருசில காட்சிகள் லீக் ஆகிவிட்டதால் முழு டிரைலரும் லீக் ஆகும் முன் அதிகாரபூர்வமாக அரை மணி நேரத்திற்கு முன்னரே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.