செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (09:29 IST)

ரிலீசுக்கு முன்னரே லீக் ஆன 'பேட்ட' டிரைலர்: அதிர்ச்சியில் படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் ரிலீசுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே டிரைலரின் ஒரு பகுதி லீக் ஆகி இணையதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'பேட்ட' படத்தின் டிரைலரில் உள்ள ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசும் ஒரு காட்சி சற்றுமுன் சமூக வலைத்தளம் ஒன்றில் லீக் ஆகியுள்ளது. 11 வினாடிகள் மட்டுமே உள்ள லீக் வீடியோ மிக வேகமக வைரலாகி வருகிறது.

'பேட்ட' டிரைலர் காட்சி லீக் ஆனது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள படக்குழுவினர் இதுகுறித்து விசாரணை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 11 மணிக்குத்தான் ரிலீஸ் என்றாலும் ஏற்கனவே யூடியூபில் அப்லோடு செய்து ஷெட்யூல் செய்துள்ள டிரைலர் வீடியோவை ஹேக்கர்கள் ஹேக் செய்து லீக் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.