1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2025 (15:22 IST)

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் சரணடைவதை ஊக்குவிக்கும் வகையில் சன்மானம் வழங்கப்படுவதால் பலரும் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர்.

 

 

இந்தியாவின் சத்தீஸ்கர், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பங்களில் நக்ஸல்களை ஒழிக்க ஆயுத குழுக்கள் நடவடிக்கையில் இறங்கி வந்த நிலையில், சமீப காலமாக நக்ஸல் சீர்திருத்த நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கி நக்ஸல்களை சரணடைய செய்வதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்வதற்குமான நடவடிக்கைகளை செய்து வருகிறது.

 

இதன் பலனாக பல நக்ஸலைட்டுகளும் சரணடைந்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகாவில் 4 நக்ஸலைட்டுகள் சரணடைந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 பெண்கள் உட்பட 9 நக்ஸலைட்டுகள் தற்போது சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 2 நக்ஸலைட்டுகளுக்கு ரூ.8 லட்சமும், 4 நக்ஸலைட்டுகளுக்கு ரூ.5 லட்சமும் என மொத்தமாக ரூ.43 லட்சம் சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K