வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (17:30 IST)

ஒரு செருப்பு வந்துவிட்டது...இன்னொரு செருப்பு வரும் ! - கமல்ஹாசன்

ஒரு செருப்பு வந்துவிட்டது இனி இன்னொரு செருப்பு வரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது :
 
நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்பு வரும். எனக்கு அந்த அருகதை உண்டு. காந்தி ஒருமுறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார்.
 
என் மீது செருப்பு விசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. ஒரு செருப்பு  வந்துவிட்டது. இன்னொரு செருப்புக்காகக் காத்திருக்கிறேன்,
 
வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுகு தன்னம்பிக்கை நம்மை  வளர்க்காது.தன் மீது செருப்பு வீசப்பட்டதையும், காந்தியின் வரலாற்று நிகழ்வையும் நினைவு கூர்ந்து கமல்ஹாசன்      பேசியதாகச் செய்திகள் வெளியாகின்றன.