திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 16 மே 2019 (08:51 IST)

வரலட்சுமியை யூஸ் பண்ணி கழற்றிவிட்ட விஷால்? வில்லன் நடிகர் பொளேர்!

நடிகர் விஷால் எல்லோரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிடுவார் என ஆர்.கே.சுரேஷ் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வில்லனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக வளர்ந்திருப்பவர். தற்போது இவர் கொச்சின் ஷாதி அட் சென்னை 03 இன்னும் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தை மலையாள இயக்குனர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்.கே.சுரேஷ் பேசியது பின்வருமாறு, 
 
மலையாளத்தில் ஈகோ இல்லை. அங்கு குடும்பமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அந்த சூழல் இல்லை. மதுர ராஜா படத்தில் நடித்த போது மம்மூட்டியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இனியும் நிறைய மலையாள படங்களில் நடிப்பேன் என பேசினார்.
அதனை தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தலில் விஷாலை தவிர்த்து வேறு யார் நின்றாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்துவோம். 
 
விஷால் எல்லாரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார். உதயா, ரித்திஷ், வரலட்சுமி உள்பட நிறைய பேர் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். வரலட்சுமியை நட்பு ரீதியில் குறிப்பிட்டேன்.
 
கார்த்தி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதனை ஏற்போம். இல்லை என்றால் நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் போட்டியிடும். நான் போட்டியிட மாட்டேன் என பேசினார்.