புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 16 மே 2019 (14:56 IST)

சயீரா நரசிம்ம ரெட்டி பட நடிகர் மயங்கி விழுந்து உயிர் இழப்பு

சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த நடிகர் ஒருவர் வெயில் தாங்க முடியாமல்  உயிர் இழந்துள்ளார். 
ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கக் கடந்த ஒன்றரை வருடமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஹைதராபாத்தில் உள்ள டிஎல்எஃப் கட்டிடம் அருகே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்துமருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  இதையடுத்து போலீசார் அந்த நபரின் செல்போனை பரிசோதனை செய்தபோது சயீர நரசிம்ம ரெட்டி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  இருந்துள்ளது.
போலீசார் சயீரா நரசிம்ம ரெட்டி செட்டிற்கு சென்று விசாரித்தபோது இறந்தவர், அந்த படத்தில் நடித்த ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் வயது(38) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த படத்தில் அவர் ஆங்கிலேயராக நடித்திருக்கிறார். அலெக்சாண்டர் வெயிலின் தாக்கம்  தாங்க முடியாமல் இறந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அலெக்சாண்டர் சுற்றுலா விசாவில் ஏப்ரல் மாதம் இந்தியா வந்துள்ளார். கோவாவில் நண்பர்களுடன் இருந்த அவர் மும்பை சென்ற இடத்தில்  சினிமா ஏஜெண்டுகள் சிலர் அவரை படங்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்தவர் அலெக்சாண்டர் தான்  என்பதை கோவாவில் உள்ள அவரின் நண்பரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.