Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழை: தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Written By siva
Updated: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:25 IST)
சென்னையில் நேற்று எதிர்பாராத பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு இருந்த நிலையில் இந்த மழையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் தேங்கிய மழைநீரில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கீழே விழுந்து பலியானார் 
 
இருசக்கர வாகனம் அவரது மேல் விழுந்தது என்றும், அதனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் தேங்கியிருந்த மழை நீரில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்த சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 50 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பெய்த மழையில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

எல்லாம் காட்டு

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments