இலங்கை மக்களுக்கு தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மேலும் திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் பொது நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக இந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது