வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 மே 2022 (22:39 IST)

ரூ.7 கோடி பணப்பரிமாற்றம்...உண்மையை ஒப்புக்கொண்ட முன்னணி நடிகை!

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய நடிகை ஜாக்குலினின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு செய்யப்பட்ட நிலையில் நடிகை ஜாக்குலினுக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை முடக்கினர்.

இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பல முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜூன் மாதம் சுகேஷை முதன் முதலில் சந்தித்ததாகவும்,  அவர் தனக்கு நிறைய பரிசுகள் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பயணத்திற்காக பல முறை தனி விமானங்கள் , ஹெலிகாப்டர்களை அவர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் பலகோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் மற்றும் நகைகளையும் சுகேஷ் கொடுத்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.