வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:11 IST)

வழக்கு மேல் வழக்கு வந்து பாய்கிறது கருணாஸ் மீது...ஆதரவாளர்கள் புலம்பல்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கண்ணியமின்றி பேசியதற்காக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தாக்கல் செய்த மணு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸின் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது கருணாஸ் ரசிகர்களை தாக்கியதாக அவர் மீது போலீஸார் மேலும் இரு புதிய வழக்குகள் போட்டு மீண்டும் கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் அக் 4ஆம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.
 
தற்போது கருணாஸின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில் அவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஆனாலும் ஐபிஎல் வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் இருப்பதால் இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றால்தான் அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியும்.
 
கருணாஸ் எப்படியும் ஜாமீனில் வெளியே வந்து விடுவார் என்று தெரிந்து கொண்ட தமிழக அரசு மீண்டும் இந்த ஐபிஎல் வழக்கை புகுத்தி அவரை வெளியே வர விடாமல் செய்துவிட்டதாக கருணாஸின் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள்.