உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

kerala
Last Updated: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (12:54 IST)
பெண்களை சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கேரள தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 13ஆம் தேதி உச்ச  நீதிமன்றம் இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துறை செய்திருந்தது.
 
இந்நிலையில் இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதிகள் ஆர்.எஃ.நாரிமன் ,எம்.கான்வில்கர்,டி.ஒய்.சந்திரசூட்,இந்து மல்கோத்ரா, ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்  சாசன அமர்வு தொடர்ந்து எட்டு  நாட்கள் விசாரணை செய்து வந்தது அதனையடுத்து  இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த மாதம் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை  இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாசித்தனர்.
அதில் பத்து வயது முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய தடை இல்லை என்று இறுதியாக தீர்ப்பு அளித்தது.
 
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது: "சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்அளித்த தீர்ப்பை மதிக்கிறேன் அதேசமயம் இந்த தீர்ப்பு குறித்து தேவசம் போர்ட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :