வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:33 IST)

திருமணத்தைத் தாண்டிய உறவு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் ஆதரவு

திருமணத்தைத் தாண்டிய உறவு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மன்ற தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபடும் ஆண் பெண் உறவில் ஆணுக்கும் மட்டும் தண்டனை அளிக்கும் தண்டனைச் சட்டம் 497-ஐ நீக்கி நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து பலதரப்பட்ட இடங்களில் ஆதரவும் விமர்சனக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சென்னையில் இன்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாஸன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ’நான் எப்போதுமே முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற ஆசைப்படுபவன். நமது புராணங்களில் கூட இது குறித்த திறந்த மனது உள்ளது. இன்றைய நவீன காலத்தில் ஆணும் பெண்ணும் சமமான நிலை இருக்க வேண்டும்  என்பது நியாயம்தான்’ எனக்கூறினார்.

இதனால் கலாச்சாரம் கெட்டுவிடும் விமர்சனங்களுக்கு ‘கலாச்சாரம் என்பது ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறக்கூடியது’ எனப் பதிலளித்தார்.

இன்று சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி குறித்த தீர்ப்பையும் தான் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.