செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (07:43 IST)

கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க உத்தரவு: நீதிமன்றம் செல்ல ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் அறிவிப்பு..!

ஆம்னி பேருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்றும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதி இல்லை என்றும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

ஆனால் கோயம்பேட்டிலிருந்து தான் பேருந்துகளை இயக்குவதாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடனே திடீரென கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ]

இந்த நிலையில் நேற்று கோயம்பேட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு  ஆம்னி பேருந்துகள் அங்கிருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

மேலும் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு நல்ல முடிவு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதிமன்றம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva