வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (07:17 IST)

ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும்: பொதுமக்கள் வாக்குவாதம்!

ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர் என ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து சிஎம்டிஏ விளக்கம் அளித்தனர். 
 
மேலும் பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர் என்று கூறிய அதிகாரிகளிடம் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும்: பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்
 
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்க வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 கோயம்பேட்டில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என டிக்கெட் அளித்திருந்த நிலையில் திடீரென கிளாம்பாக்கத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்று பயணிகளிடம் வலியுறுத்த முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
 
அதேபோல் பயணிகளும் கோயம்பேட்டிலிருந்து எங்களால் கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை என்றும் எனவே வசதிகள் செய்து தரும்பரை கோயம்பேட்டிலிருந்து தான் பேருந்துகள் கிளம்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
 
Edited by Siva