1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (16:30 IST)

ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை..! மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்..!!

omni buss
ஆம்னி பேருந்துகளை இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இன்று முதல் சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
 
ஆனால் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மீறினால் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

 
சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றுவதோ இறக்கி விடுவதோ அனுமதிக்கப்படாது எனவும் உரிய தகவல் தெரிவிக்காமல் பயணிகளுக்கு தேவை இன்றி சிரமம் ஏற்படுத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.