வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (19:00 IST)

ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அந்த நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் 82.32 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தினர் என்பதும் அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு வருமானத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது