செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (18:11 IST)

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாணிக்கம் என்பவர் இன்று பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக செயற்குழு கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராக இருப்பவரும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான மாணிக்கம் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால்தான் தான் பாஜகவில் இணைந்து உள்ளதாகவும் மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.