வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (12:57 IST)

3 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் 13க்கும் அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.