வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (08:46 IST)

சென்னைக்கு இன்று பிறந்தநாள்! எளிய முறையில் கொண்டாட்டம்!

உலகின் 31வது பெரிய நகரமாக உள்ள சென்னை இன்று அதன் 382வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

1639ம் ஆண்டு இதே நாளில்தான் முதன்முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கியது. அதை தொடர்ந்து அதிலிருந்து வணிகம் பெருகி சென்னை மாநகரம் விரிவடைந்தது.

2004ம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்தநாள் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக எளிய முறையில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான ஓவிய போட்டிகள், சிற்ப போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையின் பல்வேறு பாலங்களின் கீழ்பகுதிகள், பொது இடங்களின் சுற்றுபுற சுவர்கள் போன்றவற்றை ஓவியங்களால் அலங்கரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.