1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (14:55 IST)

நெல்லை பேருந்து நிலையத்தில் திடீரென மோதிக்கொண்ட மாணவிகள்: பெரும் பரபரப்பு

students fight
நெல்லை பேருந்து நிலையத்தில் திடீரென மோதிக்கொண்ட மாணவிகள்: பெரும் பரபரப்பு
பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களிடையே தான் சண்டை நடக்கும் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் நெல்லை பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடித்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நெல்லை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த நிலையில் திடீரென மாணவிகள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது 
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணைதளங்களில் வைரலாகி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் சண்டையை அங்கிருந்த ஆசிரியர்கள் விலக்கி வைத்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது