1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:46 IST)

தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்த முடியாது என்று சொன்ன தலைமை ஆசிரியர்? பாஜக நிர்வாகி டுவிட்

India flag
தேசிய கொடியை ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்த முடியாது என தலைமை ஆசிரியை ஒருவர் கூறியதாக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி என்பவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தர்மபுரி மாவட்டம் பேடரஹள்ளி  அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவர், தான் யெகோவா கிருஸ்துவ அமைப்பை சார்ந்தவர் என்றும் கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது கடவுளுடைய, பைபிளுடைய சட்டம் என்றும், தேசிய கொடியை ஏற்றி வணக்கத்தை செலுத்த முடியாது என்றும் மறுத்துள்ளது
 
வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து  அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதோடு, இனி யாரும் இது போன்று செயல்படாவண்ணம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.