பனையூரில் பறக்கும் தேசிய கொடி!
நடிகர் விஜய்யின் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
பிரதமர் மோடி ஆகஸ்டு 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை மாட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் சமூக வலைதளங்களிலும் காமன் டிபியாக தேசியக்கொடியை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை டிபியாக வைத்தனர். இன்ஸ்டாகிராமில் கணக்கு இருந்தாலும் அவ்வளவு ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் தோனியும் தனது டிபியில் தேசிய கொடியை வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் மூன்றாவது போஸ்டரையே டிபியாக வைத்துள்ளார்.