1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (18:56 IST)

மகனை அடித்துக் கொன்ற தாய்...அதிர்ச்சி சம்பவம்

மகன் திருநங்கையாக மாறிதால் அவரை அடித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜாகிர்  அம்மாபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமாத தேவி. இவர் தனது கணவரை பிரி ந்து வசித்து வசித்து வருகிறார்.

இவரது மகன்  நவீன்குமார்(19). சமீபத்தில் திரு நங்கையாக மாறி தனது பெயரை  மாற்றிக் கொண்டார்.

இ ந் நிலையில் மகன் திரு நங்கையாக மாறியதால் பிடிக்காமல் உமா தேவி தன் மகனை ஆணாகவே மாற்ற முயற்சிது அதற்கான ஹார்மோன் ஊசி போட்டதாகத் தெரிகிறது. இதற்கு  நவீங்குமார் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த உமா தேவி, ஆறு பேரை வீட்டிற்கு வரவழைத்து நவீன்குமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நவீங்குமாரை யாரோ அடித்து முட்புதரில் வீசியுள்ளதாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் உமா தேவி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் குமார் இன்று சிகிசை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது தாய் உமாதேவி மீது சன் ந்தேகம் அடை ந்த போலீஸார் அவரிடம் விசாணை நடத்தினர். அப்போது அவர் உண்மையைக் கூறியதாகத் தெரிகிறது. பின்னர், அவரையும், அவருடன் சேர்ந்து நவீன்குமாரை அடித்த  6 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.