நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் திருநங்கைகள் கொண்டாட்டம் !
ராகவா லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். பேய் படங்களை இயக்கி மிகப்பெரும் வெற்றி கண்ட இவர் இந்தியிலும் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா ரீமேக் இயக்கியிருந்தார்.
நடிகையும் தாண்டி நல்ல மனிதர். குழந்தைகளுக்கு உதவுவது , திருநங்கைகளை தன் படங்களில் மரியாதையுடன் நடத்துவது என சமூகத்தில் நல்ல பெயர் சம்பாதித்திருக்கும் லாரன்ஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டடுகிறார்.
காஞ்சனா திரைப்படம் மூலமாக திருநங்கைகள குறித்த மிகப்பெரிய புரிதலை இந்தியாவில் உருவாக்கிய நடிகர் லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதியம் 1.00 மணியளவில் அசோக் நகரரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ்ட்டில் அன்னதானம் மற்றும் கேக் வெட்டுதல் என நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எங்கள் வெப்துனியா குழு சார்பில் லாரன்சுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.