செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (10:20 IST)

ஹார்மோன் ஊசி போட மறுத்த திருநங்கை… தாயின் செயலால் பறிபோன உயிர்!

சேலம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த நவீன் குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி வாழ ஆரம்பித்துள்ளார்.

நவீன்குமார் திருநங்கையாக மாறியது அவரின் தாயான உமா தேவிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் திருநங்கையாக சில மாதங்கள் பெங்களூருவில் வாழ்ந்த அக்‌ஷிதா (நவீன்) சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் அம்மா பாளையம் காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடக்க அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நவீனின் மரணத்தில் அவரின் தாயார் மீது போலிஸாருக்கு சந்தேகம் வரவே, இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது உமாதேவி கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருநங்கையாக மாறுபவர்கள் ஆண்களாகவே தொடர்வதற்கு விழுப்புரம் மருத்துவமனையில் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் என்று அவருக்கு தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அப்படி ஊசி போட்டுக்கொள்ள நவின் குமார் மறுத்துள்ளார். இதனால் அவரை அடித்து காலை ஒடித்து அதற்காக சிகிச்சை அளிப்பது போல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஹார்மோன் ஊசி போடலாம் என திட்டமிட்டுள்ளார்.

இதற்காக வெங்கடேஷ் உள்ளிட்ட தனக்கு தெரிந்த 6 பேரை திரட்டி நவீனை தாக்கியுள்ளனர். அப்போது அவர் வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறி ஏற்பட்டு மயங்கியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் அவரை வீசிவிட்டு இவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து உமாதேவி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்துள்ளனர்.