திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்!
சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவரது மகன் நவீன்குமார். திடிரென இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
நவீன் குமாரின் தாய் உமாதேவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தான் அந்த பகீர் உண்மை வெளியானது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால்,தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை தாக்கியபோது நவீன் குமார் இறந்து விட்டதாக கருதி , அவரை தூக்கி வீசப்பட்டதாகும் பின்னர் ஏதும் தெரியாதது போல தானே மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்த போது நந்தகுமார் இறந்து போனது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உட்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சூரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சிவகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"வீட்டிலிருந்து தங்கள் மகன் காணாமல் போய்விட்டதாக கடந்த ஏழாவது மாதம் புகார் கொடுத்தார்கள் பின்னர் நாங்கள் பெங்களூர் சென்று நந்தகுமாரை மீட்டு வந்தோம் வரும்பொழுது நந்தகுமார் தன்னைப் பெண் போல அலங்காரம் செய்திருந்தார் .17 -07 2001 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம் அங்கு நந்தகுமார் நான் மேஜர் என் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறியதால் அனுப்பி விட்டார்கள்."
"மீண்டும் நந்தகுமார் பெங்களூருக்கு சென்று விட்டார் பின்னர் தீபாவளி சமயத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார் வந்தவர் சாலையோரங்களில் நின்று பல ஆண்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார் இதை அறிந்த நந்தகுமாரின் தாய் ஹோட்டல் கடை உரிமையாளர் இரண்டாவது குற்றவாளி வெங்கடேசனிடம் என் பையன் இதுபோல சுற்றியுள்ளது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவரை கண்டித்து வையுங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதற்கு ஏதாவது வழி செய்யுங்கள் என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் தன்னுடைய நண்பர் காமராஜரிடம் கூறியுள்ளார். அவர் தனக்கு தெரிந்த மேலும் மூன்று பேரை அழைத்து வந்துள்ளார்."
"பின்பு அனைவரும் சேர்ந்து நந்தகுமாரின் காலை உடைத்து விட்டால் வீட்டைவிட்டு வெளியே செல்ல மாட்டான் என்ற எண்ணத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மீது கடந்த திங்களன்று போர்வையை போட்டு காலை உடைத்துள்ளனர் இதில் ஏற்பட்ட போராட்டத்தில் படுகாயமடைந்தார்."
"பின்னர் யாரோ நந்தகுமாரை தாக்கி புதருக்குள் வீசி சென்றுள்ளனர் என நாடகமாடி நந்தகுமாரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு முடியாமல் போக பின்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் இறந்துவிடுகிறார் இந்த வழக்கில் தாய் உட்பட மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்து உள்ளோம்," என்றார் ஆய்வாளர் சிவகுமார்.