திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (08:55 IST)

மக்கள் நீதி மய்யம் புதுவை வேட்பாளர்களின் 3வது பட்டியல்!

கமல்ஹாசனின் மக்கள் மய்யம் மையம் கட்சியின் தலைமையில் ஏற்பட்டுள்ள மூன்றாவது கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் பாரிவேந்தர் கட்சி உள்ளது என்பது தெரிந்ததே 
தமிழகத்தை போலவே புதுவையிலும் இதே கூட்டணி தொடர்கிறது என்பதும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த பட்டியலின் படி மாஹே தொகுதியில் கே.கே. ஜலால் என்பவரும் நெடுங்காடு தொகுதியில் அரவிந்தராஜ் என்பவரும், திருநள்ளாறு தொகுதியில் பிச்சராசு என்பவரும் காரைக்கால் தெற்கு தொகுதியில் சூசை என்பவரும் நிரவி டிஆர் பட்டினம் என்ற தொகுதியில் முஹமது ஹாஜா பத்ருதீன் என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்து பேர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது