வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (17:52 IST)

சர்ச்சை பேச்சு: கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என  சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்


சில ஆண்டுகளுக்கு முன் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக நடிகர் கம;ல்ஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

அதில், இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தான் பேசவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,  அரசுத்தரப்பில் கமல்ஹாசன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள் கமலின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
 இதுமக்கள் நீதி மய்யம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.