செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siv
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (08:48 IST)

போதிய கூட்டம் இல்லை: பிரச்சாரத்தை ரத்து செய்த கமல்ஹாசன்!

போதிய கூட்டம் இல்லாத காரணத்தால் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த கமல்ஹாசன், மடத்துக்குளம் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதால் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார் 
 
பின்னர் உடுமலைக்கு கிளம்ப இருந்த நிலையில் உடுமலையிலும், போதிய கூட்டம் இல்லை என்று தகவல் வந்தது. இதனை அடுத்து உடுமலை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கமல்ஹாசன். அதன்பின் அவர் ஈரோடு சென்றுவிட்டார்.
 
ஆரம்பித்தில் கமல்ஹாசன் செல்லும் பகுதிகளில் நல்ல கூட்டம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கூட்டம் குறைவாக இருப்பது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது