புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (08:54 IST)

மகளிருக்கு 40% இட ஒதுக்கீடு - அரசின் முடிவை வரவேற்கும் கமல்!

அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது என கமல் தகவல். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தபோது தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி அரசு பணிகளில் இதுவரை பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை 40% ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. 
 
மேலும், தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், தமிழ் தகுதித்தேர்வாக சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதோடு இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம் என கூறியுள்ளார்.