வெளியேறும் ஃபோர்டு கார் - முதல்வர் இன்று ஆலோசனை!
ஃபோர்டு கார் நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைமலைநகரில் ஃபோர்டுக்கு மாற்றாக வேறு கார் நிறுவனத்தின் ஆலை செயல்பட அனுமதிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஃபோர்டு கார் நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் அதிகாரிகளுடன் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.