தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
2019ம் ஆண்டிற்கான தேசிய விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் தேர்வான தமிழ் திரை கலைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவிப்புகள் நேற்று வெளியாகின அதில் பல்வேறு பிரிவுகளில் நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!” என வாழ்த்தியுள்ளார்.