தமிழ் இனத்தின் அரசாக திமுக இருக்கும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் சங்க பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ் இனத்தின் அரசாக திமுக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர் “இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும். ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவனது கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ள அரசு திமுக அரசு.
ஈராயிரம் ஆண்டு பழமையான மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தது திமுக ஆட்சிதான். உலக தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு” என்று கூறியுள்ளார்.