1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will ADMK General Council meeting happen through online

ஆன்லைன் முறையில் அதிமுக பொதுக்குழு?

ஆன்லைன் முறை
தற்போது தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் ஆன்லைன் முறையில் பொதுக்குழுவை நடத்த பரீசலீக்கப்பட்டு வருகிறது. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன நிலையில் பின்னர் அதிமுக பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் ஆன்லைன் முறையில் பொதுக்குழுவை நடத்த பரீசலீக்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டம் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் உயிரிழப்பு!