1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (07:45 IST)

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான ஸ்டாலின்: 3 நாட்களுக்கு பிசி!

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" 3 ஆம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
இந்நிலையில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையிலும் கூட்டணி குறித்த முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். அந்த அவ்கையில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" 3 ஆம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 
இந்த பரப்புரையின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூரில் ஆகிய மாவட்டங்களில் பிப்.15 வரை மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.