மீண்டும் தள்ளிப்போகும் சிறுகனூர் திமுக மாநாடு!
திமுக 400 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் மாநாடு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. முதலில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க இருந்த மாநாடு பின்னர் 400 ஏக்கராக மாறியது. அதனால் பணிகள் முடிய தாமதமானதால் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இப்போது மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடியாததே இதற்குக்காரணம் என சொல்லப்படுகிறது.