ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (12:19 IST)

எம்ஜிஆர் கெட்டப்பில் எடப்பாடியார்! – கரூரை கலக்கும் போஸ்டர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பலர் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ளனர். முன்னதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னை எம்ஜிஆரின் நீட்சி என கூறிக்கொண்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா என்றும், தன்மேல் பாசம் கொண்டவர் என்றும் கூறினார்.

இந்நிலையில் அதிமுகவினர் சிலர் எடப்பாடியாரையே எம்ஜிஆராக சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். கரூரில் எம்ஜிஆர் போலவே வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளது போல சித்தரித்து “வாழும் புரட்சி தலைவரே” என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.