புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (20:46 IST)

தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனம் - டி.டி.வி. தினகரன்

ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து, சமீபத்தில் சசிகலா தமிழகம் வந்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்களான டிடிவி. தினகரன் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கட்சித்தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நமது தியாகத்தலைவிக்கான வரவேற்பை தமிழகத்தின் பெருவிழாவாக மாற்றியவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள்:

களத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது பரப்புரை மேற்கொண்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :  டிடிவி தினகரன் அதிமுகவை ஒருபோதும் உடைக்க முடியாது. அவருடைய கனவும் பலிக்காது.ஒரு குடும்பம் மட்டும் ஆள்வதற்கு கட்சி தலைவணங்காது எனத் கூறியுள்ளார்.