என்ன ரஜினி.. எப்படி இருக்கீங்க! – நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.